ஓடும் காரில் தீவிபத்து

ஆலந்தூர், ஜூன் 10: சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார்(40), டெக்ரேஷன் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி தனது உறவினர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். குன்றத்தூரில் உள்ள சகோதரியின வீட்டில் உறவினரை இறக்கிவிட்டு மீண்டும் தனது நண்பருடன் ஆலந்தூரில் உள்ள தனது சகோதரன் வீட்டிற்கு புறப்பட்டார். ஜிஎஸ்டி சாலையில் பரங்கிமலை தபால் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தபோது காரின் இன்ஜினில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார் உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் கிண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

The post ஓடும் காரில் தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: