3,900 பேர் பணி நீக்கம் ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன்: முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகமெங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே  மைக்ரோசாஃப்ட், அமேசான்,  கூகுள், சாஃப்டிபை, மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை  பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர்  இந்தியாவை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள்.  

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்(ஐபிஎம்) நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. மொத்தம் 3900 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவீதம். ஐபிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் அதிகம் பேர் வேலை இழப்பார்கள் . தொடரும் பணி நீக்க அறிவிப்பால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: