இரட்டை இலையும் காணோம்... வேட்பாளரையும் காணோம்... வைரலாகும் மீம்ஸ்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என கருதியதால் அதிமுகவிடம் நீங்களே நில்லுங்கள் என கூறி ஜி.கே.வாசன் தப்பித்துக்கொண்டார். அதிமுகவில் எடப்பாடி அணி தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நிறுத்தப்படுவார் என கூறப்பட்டது.

சின்னம் கிடைப்பதில் சிக்கல், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, ஓ.பன்னீர்செல்வம் அணி தனியாக போட்டி உள்ளிட்ட காரணங்களால் கரை சேருவது கடினம் என்பதால் யாரும் போட்டியிட தயக்கம் காட்டி வருவதோடு, சில நிர்வாகிகள் எங்களை சொல்லிடாதீங்க என தலைமையிடம் அடம்பிடித்து வருவதாக கூறப்படுகின்றது. அதிமுக நிர்வாகிகளின் பரிதாப நிலை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது. குறிப்பாக, வடிவேல் பட காமெடிகளை அடிப்படையாக வைத்து மீம்ஸ்கள் உருவாக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர், வேட்பாளர்களை வலுக்கட்டாயமாக நிறுத்துவது பற்றியும், வேட்பாளர்கள் தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்று அழுது கதறி தலைதெறிக்க ஓடுவது போலவும், வடிவேலு படத்தில் கிணத்த காணவில்லை என்ற காமெடியை மையப்படுத்தி இரட்டை இலை சின்னத்தை காணவில்லை என்று தொண்டர்கள் தேடுவது போலவும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Related Stories: