மனைவி கொலை வழக்கில் 9 மாதங்களாக சாட்சியை நீதிமன்றம் வரவிடாமல் துபாய்க்கு அனுப்பிய கணவன்: புழல் சிறையில் அடைப்பு

அண்ணாநகர்: கோயம்பேட்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக 9 மாதமாக சாட்சியை நீதிமன்றத்துக்கு வரவிடாமல் கணவர் துபாய்க்கு அனுப்பி வைத்த பரபரப்பு தகவல் தெரிய வந்தது. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் அலோன் (52). இவரது மனைவி லட்சுமி (46). மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஆவான் மனைவியை தாக்கி  சித்ரவதை செய்து வந்துளார். இந்நிலையில் கடந்த வருடம் 27.4.21 அன்று தம்பதிக்குள் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அலோன், தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்தார்.

தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அலோனை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்திபோது லட்சுமியை கொலை செய்ததை நேரில் பார்த்த லட்சுமியின் தம்பியின் மனைவி செல்வி (40) என்பது தெரியவந்தது. பின்னர் விசாரணை செய்ய போலீசார் செல்வி வீட்டிற்கு சென்ற போது செல்வி அங்கு இல்லை. வீடு பூட்டி கிடந்ததால் செல்வி எங்கு சென்றார் என்று போலீசார் விசாரணை செய்தனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க செல்வியை துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் வந்தபோது கொலை வழக்கு தொடர்பாக சாட்சி செல்வி வராததால் வழக்கு தள்ளிப்போனது. மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அடுத்த மாதம் 2ம் தேதி அன்று இறுதி தீர்ப்பு வர இருப்பதால் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகரின் கடும் முயற்சியால் சாட்சியை துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வருகிற 29ம் தேதி வருவதற்கு டிக்கெட் புக் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாட்சியிடம் பல மாதங்களாக போராடி முயற்சி செய்து  வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வரவைக்கும் ஆய்வாளர் சந்திரசேகரை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: