யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வீசிய ‘குடிமகன்’ கைது


காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரை நான்கு வழிச்சாலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த சாலையில் உள்ள பாலத்தின் அடியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த போதை வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் தெற்கிருப்பு கக்கன் நகரை சேர்ந்த தங்கப்பன் மகன் ஆனந்தராஜ்(23) என்பதும், யூடியூப்பில் பெட்ரோல் குண்டு எப்படி செய்வது என்று பார்த்து, ஒரு குவார்ட்டர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து அவர் வெடிக்கச் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வீசிய ‘குடிமகன்’ கைது appeared first on Dinakaran.

Related Stories: