திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் ஈக்காட்டுதாங்கல் திருவூரல் உற்சவம்

சென்னை:  2023-ம் வருடத்தில் 26.01.2023 வியாழக்கிழமை அன்று ஈக்காட்டுதாங்கல் திருவூரல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. 26.01.2023 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் விஷ்வரூப சேவை நடைபெறும் என கோவில் விவாகம் அறிவித்துள்ளது.

ஈக்காட்டுதாங்கல் திருவூரல் உற்சவமானது திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் ஒன்று. வருட இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான ஈக்காட்டுதாங்கலில் உள்ள இடத்தின் பின்பகுதியில் அடையாறு நதி ஓடிக்கொண்டு இருந்த காலத்தில் மேற்கு சைதாப்பேட்டையில் நதியில் இறங்கி மேற்கு கரையில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் எழுந்தருளப்பட்டு திருமஞ்சனம் கண்டருளி பின்னர் நதியில் திருவீரல் உற்சவம் நடைபெறும். 2023-ம் வருடத்தில் 26.01.2023 வியாழக்கிழமை அன்று ஈக்காட்டுதாங்கல் திருவூரல் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. 26.01.2023 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் விஷ்வரூப சேவை நடைபெறும்.

அதனை தொடர்ந்து தினசரி பூஜைகள் அதிகாலை 1.15 மணிக்குள் நிறைவடையப்பெற்று, அதிகாலை 1.30 மணியளவில் ஸ்ரீபார்த்தசாரதிசுவாமி உற்சவர் அலங்கரிக்கப்பட்டு உபயநாச்சிமாருடன் பல்லக்கில் புறப்பாடு செய்யப்பட்டு திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வளாகத்திலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் திருவல்லிக்கேணி மாடவீதி, வி.ஆர்.பிள்ளை தெரு, டாக்டர் பெசன்ட் சாலை வழியாக மயிலாப்பூர், மந்தைவெளி, அபிராமபுரம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், மகாலிங்கபுரம், மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம், அசோக் நகர் ஆகிய வழித்தடங்கள் வழியாக கிண்டி தொழிற்பேட்டை அருகிலுள்ள ஈக்காடு தாங்கலில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்திற்கு அன்று பகல் சுமார் 11.00 மணியளவில் எழுந்தருள செய்யப்படவுள்ளார்.

பின்னர், மேற்படி இடத்தில் திருமஞ்சனம் (அபிசேகம்) நடைபெற்று மாலை சுமார் 4.00 மணியளவில் அங்கிருந்து புறப்பாடு ஆகி சைதாப்பேட்டை, நந்தனம், சேமியர்ஸ் ரோடு, சி.ஐ.டி நகர், ராயப்பேட்டை வழியாக மீண்டும் இத்திருக்கோயிலினை இரவு 11.00 மணியளவில் பெருமாள் வந்தடைவார்.

Related Stories: