அமெரிக்காவில் கடந்த 17 ஆண்டுகளில் துப்பாக்கி சூட்டில் 2793 பேர் படுகொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 17 ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2793 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதற்காக கடுமையான சட்டங்கள் இல்லாததால், பலரும் தாராளமாக துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடும் அதிகமாக உள்ளது.

அதனால் துப்பாக்கிச் சூடு நடக்காத நாளே இல்லை என்ற அளவில் தினசரி உயிர் பலிகள் நடக்கின்றன. கடந்தாண்டை போலவே இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த ஆண்டின் ஜனவரியில் நேற்று வரை நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 39 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை (கிட்டத்தட்ட 17 ஆண்டுகள்) 2,793 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித் து சான் மேட்டியோ கவுண்டி மேற்பார்வையாளர்கள் வாரியத்தின் தலைவர் டேவ் பைன் கூறுகையில், ‘நவீன சமூகத்திற்கான வாழ்க்கை முறை அமெரிக்காவில் இல்லை. துப்பாக்கி உரிமத்திற்கான அனுமதியை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: