அரசு வேளாண் பட்ஜெட் தயாரிக்க விவசாயிகள், விஞ்ஞானிகள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள், சங்கப்பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். தொடர்ந்து, இன்று (24ம் தேதி) திருநெல்வேலியிலும், 28ம் தேதி சிவகங்கையிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம்.  உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம். வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசு செயலர், தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.tnfarmersbudget@gmail.com, வாட்ச் அப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி 9363440360, வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Stories: