காங். நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்ததால் திரிபுராவில் 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: 3 சிறப்பு பார்வையாளர்கள் அனுப்பிவைப்பு

அகர்தலா: திரிபுராவில் நடந்த பைக் பேரணியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் நடந்த தாக்குதலை தொடர்ந்து, 3 போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. திரிபுராவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அகர்தலா அடுத்த மஜ்லிஷ்பூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த பைக் பேரணியின் போது, இரு தரப்பினரிடையே மோதல் நடந்தது.

இந்த சம்பவத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் குமார் உட்பட 15 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காயமடைந்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மூன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன. எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட கூறி, அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘திரிபுரா தேர்தலை கண்காணிக்க யோகேந்திர திரிபாதி (ஐஏஎஸ்), விவேக் ஜோஹ்ரி (ஐபிஎஸ்), முரளி  குமார் (ஐஆர்எஸ்) ஆகிய மூன்று சிறப்புப் பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம்  நியமித்துள்ளது. அவர்கள் தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள். காங்கிரஸ் பேரணி மோதல் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட துணை பிரிவு போலீஸ் அதிகாரி, இரண்டு எஸ்ஐ அந்தஸ்திலான அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: