என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சி நடக்கிறது!: இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் இருந்து என்னை விரட்டியடிக்க தீவிர முயற்சிகள் நடப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், இங்கிலாந்து நாட்டின் ‘தி நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பொதுத் தேர்தலுக்கு முன்னதாக என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

அதற்காக ஆளும் கூட்டணி அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக என் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதுபுது வழக்குகளை பதிது செய்து வருகின்றனர். இருப்பினும், என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற அவர்களால் எந்த வழக்கும் போட முடியவில்லை’ என்றார். முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு தோற்றதால், அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: