ஊட்டி தாவரவியல் பூங்காவில் புல் மைதானத்தை பாதுகாக்க ஸ்பிரிங்லர் தண்ணீர் தெளிப்பு

ஊட்டி: உறை பனியில் இருந்து புல்ெவளிகளை காக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை உறைபனி காலமாகும். இச்சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். உறைபனி சமயத்தில் புல் மைதானங்கள், தேயிலை தோட்டங்களில் உறை பனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டி கிடக்கும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விாித்தது போல் காணப்படும். இந்நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து உறை பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது வழக்கத்தை விட உறை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகளும் கருகி வருகின்றன. அதிகாலை நேரங்களில் தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறை பனி கொட்டி கிடக்கின்றன. குறிப்பாக கடந்த 10 நாட்களாக கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உறை பனி பொழிவு இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உறை பனி கொட்டி கிடப்பதால் புல்வெளிகள் பாதிப்படையும் நிலை இருந்தது.

இதைத்தொடர்ந்து நாள்ேதாறும் காலை, மாலை வேளைகளில் புல் மைதானங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும் பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் போன்றவைகளை பாதுகாக்கும் பொருட்டு தாகைகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories: