பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள மாலத்தீவிற்கு இந்தியா ஆதரவு: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

மாலே: இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் மாலத்தீவில் இந்தியா-மாலத்தீவு மேம்பாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக  ஹனிமாது சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘மாலத்தீவு உடன் இந்தியாவின் உறவானது ஒருவருக்கொருவரின் நலனுக்காக இணைந்து செயல்படுவதற்கான உண்மையான விருப்பத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழலில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும் புதிய இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த சூழலில் ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்பின் தேவை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்தியா அவசர நிதியுதவி உட்பட வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை மாலத்தீவு எதிர்கொள்வதற்கான ஆதரவையும் இந்தியா வழங்கி வருகின்றது. ஹனிமாது சர்வதேச விமான நிலைய மேம்பாட்டு திட்ட தொடக்கமானது இந்தியா -மாலத்தீவு வளர்ச்சி கூட்டணியின் ஒரு வரலாற்று மைல் கல் ஆகும்” என்றார்.

Related Stories: