இமாச்சலில் இன்று நிலநடுக்கம்

தர்மசாலா: இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. தர்மசாலாவில் இருந்து கிழக்கே 22 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த ஜனவரி 5ம் தேதி, டெல்லி - என்.சி.ஆர், ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: