கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

சென்னை: கோல்டன் குளோப் வென்ற கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ‘உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி’ என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் திரைப்படம் உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி. நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு பெஸ்ட் ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் இந்த விருது மிக முக்கிய விருதாக உள்ளது.

Related Stories: