பொதுசிவில் சட்டம் தொடர்பான குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பான விவகாரத்தில் அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக நீண்ட நாட்களாக நாடு முழுவதும் விவாதங்கள் இருந்து வரும் நிலையில், குஜராத் உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழுக்களை அமைத்து இருந்தது. இதையடுத்து இந்த குழுக்களுக்கு எதிராக அனுப் பரண்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,‘‘சட்டத்திற்கு புறம்பான இந்த குழுக்கள் கலைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் பிரிவு 162 கீழ் மாநில அரசுகளுக்கு இத்தகைய குழுக்களை அமைக்க அதிகாரம் இருக்கிறது. அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: