புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன. ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் வரும் 12ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் இந்திய விமானப்படையின் 4 சு-20 எம்கேஐ ஜெட் விமானங்களும், 2 சி-17 விமானங்களும் ஒரு ஐஎல்-78 விமானமும், ஜப்பான் சார்பில் 4 எப்-2 மற்றும் 4 எப்-15 போர் விமானங்களும் பங்கேற்கின்றன.
