பவாணீஸ்வரர் கோவிலில் திருவாதிரை தேரோட்டம்

ஊட்டி : ஊட்டி பெர்ன்ஹில் பவாணீஸ்வரர் கோயிலில் நேற்று திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது-ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் ஸ்ரீபவாணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவன் கோவில்களில் நடைபெறுவது போல் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன விழா இந்த கோவிலில் கடந்த 1910ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஸ்ரீ பாவனீஸ்வரர், நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரேஸ்வரி 111வது ஆருத்ரா தரிசன மாகோற்சவ விழா நேற்றுமுன்தினம் காலை 9.30 மணிக்கு கணபதி, சூரிய பகவான் பூஜை, மதியம் 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணஹூதி, மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குவதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் துவங்கிய தேர் ஊர்வலத்தை தோடர் பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஊட்டி நகருக்குள் தேர் ஊர்வலம் நுழைந்த போது கலெக்டர் அம்ரித், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

தேர் ஊட்டி நகரம் முழுவதும் உலா வந்து நிலையில் ஐந்து லாந்தர் உள்ளிட்ட இடங்களில் தோடர் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து மாலையில் கோயிலில் நிறைவடைந்தது. இதில் தோடர் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பவானீஸ்வரர் கோவிலின் பரம்பரை அறங்காவலர் காந்தராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: