சென்னையில் ஜூன் 1 முதல் 19ம் தேதி வரை வழக்கத்தை விட 339% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: சென்னையில் ஜூன் 1 முதல் 19ம் தேதி வரை வழக்கத்தை விட 339% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் 36.6 மிமீ மழை சராசரியாக பதிவாகும் நிலையில், இந்த ஆண்டு 173.8 மிமீ மழை பெய்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

கடந்த 17ம் தேதி நள்ளிரவில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதையடுத்து நேற்று முன்தினமும் சென்ளை, புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம். அண்ணாநகர், தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவானது. மேலும் கொளத்தூர், ஐஸ்அவுஸ், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. சென்னையில் ஜூன் 1 முதல் 19ம் தேதி வரை வழக்கத்தை விட 339% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் 36.6 மிமீ மழை சராசரியாக பதிவாகும் நிலையில், இந்த ஆண்டு 173.8 மிமீ மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது என ஆய்வாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

 

The post சென்னையில் ஜூன் 1 முதல் 19ம் தேதி வரை வழக்கத்தை விட 339% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: