எனக்கு இந்தப் பயிற்சி இல்லையே என்று – நான் குறைமனிதனாய்க் குமுறுகிறேன் : கவிஞர் வைரமுத்து வருத்தம்

சென்னை : ஸ்விட்சர்லாந்தில் எடை குறைந்த, இயக்க எளிதான எஸ்ஐஜி 550 துப்பாக்கியை ஏந்தி கொண்டு கவிஞர் வைரமுத்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சியை தன்னால் கற்க முடியவில்லையே என்றும் அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் ஏந்தியிருக்கும்
எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி
ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது
மற்றும் கடந்தது

எடை குறைந்த
இயக்க எளிதான
துல்லியத் துப்பாக்கி இது

சுவிட்சர்லாந்து
பள்ளிக் கல்வியில்
இது வீரப் பயிற்சிக்கு
வினைப்படுகிறது;
ராணுவ சேவைக்கு
விதையிடுகிறது

இந்தப் பயிற்சி
தன்னம்பிக்கை ஊட்டித்
தன்னெழுச்சி தருவதாக
நண்பர் கல்லாறு சதீஷின் மகள்
இனிஷா தெரிவித்தார்

தோட்டாத் தூணியை நிரப்புதல்
நெம்புதல்
விசை முடுக்கல்
சுடுகுறி பார்த்தல்
சுடல் என்பன
இதன் படிநிலைகள்

விருப்பமுள்ளவர்கள்
பயிற்சிபெறக்
கல்வித் திட்டங்கள்
கைதட்டி வரவேற்க வேண்டும்

தோழன் செய்யாததைத்
துப்பாக்கி செய்யும்

எனக்கு இந்தப் பயிற்சி
இல்லையே என்று – நான்
குறைமனிதனாய்க்
குமுறுகிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எனக்கு இந்தப் பயிற்சி இல்லையே என்று – நான் குறைமனிதனாய்க் குமுறுகிறேன் : கவிஞர் வைரமுத்து வருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: