கள்ளக்குறிச்சி அருகே விஷச் சாராய மரணம்: புதிய தகவல்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் நடந்த விஷச் சாராய மரணங்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கருணாபுரத்தில் நேற்று முன்தினம் மரணமடைந்த கூலித் தொழிலாளி இறுதிச்சடங்கில் பங்கேற்ற சுமார் 200 பேர் சாராயம் குடித்துள்ளனர். நேற்று முன்தினம் சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு அன்றைய தினம் இரவே உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று காலை சிலர் உயிரிழந்ததை அடுத்து விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சென்றுள்ளனர். இதுவரை 127 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே விஷச் சாராய மரணம்: புதிய தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: