இமாச்சல பிரதேச சட்டப்பேரவை முதல் கூட்டம்: காங். பழி வாங்குவதாக பாஜ குற்றச்சாட்டு

தர்மசாலா: இமாச்சல பிரதேச புதிய அரசின் முதல் சட்டப் பேரவை கூட்டம் முதல் நாளிலேயே மிக பரபரப்புடன் தொடங்கியது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி நடந்தது. இதில் 40 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டப் பேரவை கூட்டம் நேற்று காலை கூடியது.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் சுரேஷ் அக்னிஹோத்ரி, எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர், முன்னாள் துணை சபாநாயகர் ஹன்ஸ் ராஜ் மற்றும் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு இடைக்கால சபாநாயகர் சந்தர் குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  உறுதி மொழி ஏற்புக்கு முன் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர், காங்கிரஸ் ஆட்சி பழி வாங்கும் போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்த கூட்டத்தில் புதிய சபாநாயகராக 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் குல்தீப்சிங் பதனியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். சபாநாயகருக்கான தேர்தலில் அவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் இன்று முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.

Related Stories: