ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெண்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 12:30 மணிக்கு கோவிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தன. பூஜை முடிந்ததும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் காலை 6 மணியளவில் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
