சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களில் பெண்களிடம் 3,500 சவரன் நகைகளை மோசடி செய்த பெண்ணிடம் விசாரணை..!!

சென்னை: சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களில் பெண்களிடம் 3,500 சவரன் நகைகளை மோசடி செய்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பெண்களிடம் நூதன முறையில் நகைகளை பெற்று மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது. 10 சவரன் நகை தந்தால் ரூ.15,000 தருவதாக வாக்குறுதி அளித்து பலரிடம் நகைகளை பெற்று மோசடி நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரம் நகரை சேர்ந்த பாத்திமா நாச்சியார் மீது 50க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர்.

Related Stories: