போப் 16-ம் பெனடிக்ட் கவலைக்கிடம்

வாடிகன்: போப் பெனடிக்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 95 வயதாகும் போப் பெனடிக்ட் உடல்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் போப் பதவியை துறந்த அவர், வாடிகன் நகரில் உள்ள குருமடத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

பெனடிக்ட் உடல் நலம் பெற வேண்டி, வாடிகன் நகரில் நேற்று முன்தினம் பொதுப் பிரார்த்தனை நடந்தது. இந்நிலையில், 16-ம் பெனடிக்டின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நகரில் இருந்து வௌிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: