இந்தியா-பாக். இடையே பேச்சுவார்த்தைக்கு உதவ தயார்: அமெரிக்க வெளியுறவு அதிகாரி கூறுகிறார்

வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று முன்தினம் கூறுகையில்,‘‘ இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால், அதற்கான திட்டத்தை இருநாடுகளும்தான் வகுக்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் பேச்சுவார்த்தையின் நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை பற்றி அந்த இரு நாடுகளால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

தீவிரவாத எதிர்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உட்பட, எங்கள் உயர்மட்ட தீவிரவாத எதிர் ப்பு உரையாடல் மூலம் பாதுகாப்பு விஷயத்தில் பாகிஸ்தானுடன் நாங்கள் கூட்டாளியாக இருக்கிறோம். மேலும் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஆதரிக்கிறோம். தீவிரவாத தடுப்பு விவகாரங்களில் எங்கள் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக நாங்கள் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்ந்து பேசுவோம். மேலும் எங்கள் வருடாந்திர தீவிரவாத எதிர்ப்பு உரையாடல் மற்றும் பிற இருதரப்பு ஆலோசனைகள் உட்பட பிராந்திய பாதுகாப்பை விரிவாக விவாதிப்போம்’’ என்றார்.

The post இந்தியா-பாக். இடையே பேச்சுவார்த்தைக்கு உதவ தயார்: அமெரிக்க வெளியுறவு அதிகாரி கூறுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: