இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தல்

லாகூர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர் குலாம் ஷபீர். இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் தலைவர் ஷபாஸ் கில்லின் சகோதரர். இந்நிலையில் குலாம் இரண்டு நாட்களுக்கு முன் லாகூரில் உள்ள தனது வீட்டில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரது மகன் பிலால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கஹ்னா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை.

The post இம்ரானின் அரசியல் ஆலோசகர் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: