ஹஜ் புனித யாத்திரையில் 90 இந்தியர்கள் உட்பட 900 யாத்ரீகர்கள் பலி

மெக்கா: இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கடந்த 14ம் தேதி புனித யாத்திரை தொடங்கியது. இதில், உலகம் முழுவதும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். சவுதியில் கடந்த 16ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் சில நாட்கள் வரை ஹஜ் பயணிகள் மெக்காவில் தங்கியிருந்து தங்களது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு சென்றுள்ள யாத்ரீகர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மெக்கா அருகில் உள்ள அல் ஹராம் பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலைக்கு பல நாடுகளை சேர்ந்த 900 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனிகல், துனிசியா, மலேசியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் பத்திரிகையான டான் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 90 ஹஜ் பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post ஹஜ் புனித யாத்திரையில் 90 இந்தியர்கள் உட்பட 900 யாத்ரீகர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: