புதுச்சேரியில் 28ம் தேதி பந்த்: அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது, புதுச்சேரி நிர்வாகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது.  

அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமை. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 28ம் தேதி (புதன்) முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த பந்த் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்க கோரிக்கை வைப்போம், என்றார்.

Related Stories: