சென்னையில் அனுமதியின்றி போராட்டம்: அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி 33 இடங்களில் போராட்டம் நடத்தியதாக கூறி அதிமுக நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றைய தினம் விலைவாசியை கண்டித்து, அதிமுகவின் இ .பி.எஸ் . அணியின் சார்பாக சென்னையில் 33 இடங்களில் போராட்டம் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுருந்தன இந்த சூழ்நிலையில் போராட்டங்களுக்கு காவல் துறைக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், குறிப்பாக அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜே.குமார், விறுவிரவி, எம்.கே.அசோக், உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட பல்வேறு தலைமையில் பல்வேறு இடங்களில் இந்த போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டங்களுக்கு சென்னை காவல் துறை உரிய அனுமதி வழங்க வில்லை என தெரியவந்ததை அடுத்து, நேற்றைய தினம் தடையை மீறி இந்த போராட்டமானது நடைபெற்றது. அதன் அடிப்படையில் அரசு அதிகாரி உத்தரவை மீறுதல், சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல், உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் சென்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இது தொடர்பான வழக்கானது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த போராட்டங்களில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.    

Related Stories: