செங்கம் அருகே 10 ஏக்கரில் அமையும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு-ஆர்டிஓ நேரில் ஆய்வு

செங்கம் : செங்கம் அருகே 10 ஏக்கரில் அமையும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு இடத்தை ஆர்டிஓ மந்தாகினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு பல்வேறு இடங்களில் தற்போது இயங்கி வருகிறது. அந்த கிடங்குகளில், அந்தந்த பகுதிகளில் கூடுதலாக உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்படுகிறது.

அதன்படி, செங்கம் அடுத்த  மேல்பென்னாத்தூர் கிராமத்தில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் கிடங்கு அமைக்கப்படுகிறது. இதற்காக அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் இடம் ஏற்கனவே ஆர்ஜிதம்  செய்யப்பட்டது.இந்நிலையில், கிடங்கு அமைய உள்ள இடத்தை திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தாசில்தார் முனுசாமி, துணை தாசில்தார் திருநாவுக்கரசு, நிலஅளவையர் கார்த்தி, வருவாய் ஆய்வாளர் நீலகண்டன், கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: