தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

சென்னை: தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் மே வரை செயல்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35-க்கு புறப்படும் ரயில் (06012) ஜூன் 2,9,16,23,30-ல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05-க்கு புறப்படும் ரயில் (06011) ஜூன் 3,10,17,24,31 திங்களில் இயக்கப்படும்.

The post தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: