மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் தொன்மையான 114 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஒப்புதல்

சென்னை: மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் தொன்மையான 114 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 47-வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொ.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோயில், மேற்குமாம்பலம், அருள்மிகு சத்யநாராயண பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், பஜார் ரோடு, அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், ஆதியூர், அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஊத்துக்குளி, அருள்மிகு கைலாசநாதர்  திருக்கோயில், திருச்சி மாவட்டம், செவந்திலிங்கபுரம், அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோயில், திருவண்ணமலை மாவட்டம்,  சே.கூடலூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தருமபுரி மாவட்டம், அதகப்பாடி, அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், ஈரோடு, அருள்மிகு காளிங்க கிருஷ்ண வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், பவானி, அருள்மிகு மகிழீஸ்வரர் திருக்கோயில்.

நாமக்கல் மாவட்டம், கொல்லப்பட்டி, அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில், வேலூர் மாவட்டம், வெட்டுவானம், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி, அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், இளையனார் வேலூர், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், பனையூர், அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 114 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

Related Stories: