ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை செப்.30 வரை நீட்டித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவு அளித்துள்ளது.

இ பாஸ் நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்று அரசு தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள சுற்றுலாப்பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு விசிட் அடித்து வருகிறார்கள். கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால், ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால், கடந்த ஒரு மாதங்களாக, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் ஊட்டி, கொடைக்கானலில் கடுமையான போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசலாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில்தான், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 7ம் தேதி முதல் ஜூன் 30 வரை இபாஸ் முறை அமலில் இருக்கும். இபாஸ் முறை ஜூன் 30ம் தேதி முடிவடையம் நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு உத்தரவு அளித்துள்ளது.

 

 

 

 

 

 

 

The post ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: