தஞ்சையில் பாமாயில் தொழிற்சாலை, தி.மலை, கரூரில் மினி டைட்டில் பூங்காகள்: அமைச்சர் டி ஆர்,பி.ராஜா அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலுரை அளித்து வருகிறார். அதில்,

விண்வெளி தொழில் கொள்கை

தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும் அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கை.

மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இக்கொள்கையில் வகுக்கப்படும்.

பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு சலுகைகளுடன் கூடிய ஒரு சிறப்பு திட்டம் வெளியிடப்படும்

அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்திடவும் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகிடவும் வாய்ப்பு

டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு

ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கு உருவாக்கப்படும்.

புதிய சிப்காட் தொழிற் பூங்காக்கள்…!

கும்மிடிப்பூண்டி
ஓட்டப்பிடாரம்
உடையார்பாளையம்
திருப்பெரும்புதூர்
சென்னை
வெளிவட்டச்சாலை
குன்னம்

ரூ.10,788 முதலீடுகளை ஈர்க்கும். 1,04,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.

பசுமை சூழல் பேணுதல், திடக்கழிவு மேலாண்மை, மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

ரூ.225 கோடி முதலீடு ஈர்க்கப்படும்

3,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

பசுமை சூழல் பேணுதல், திடக்கழிவு மேலாண்மை, மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

ரூ.225 கோடி முதலீடு ஈர்க்கப்படும்

3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கோயம்புத்தூரில் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம்…

தொழிலகங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும், முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கும் தொடங்கப்படும்.

கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய மினி டைடல் பூங்காக்கள்…!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் முன்னெடுப்பு.

1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.

தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில்(Joint Venture) தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும்…!

தொழிற்பூங்காக்களை உருவாக்குவதில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம், தனியார் நிறுவனங்களின் நிபுணத்துவத்தை சிப்காட் பயன்படுத்தும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.2,100 கோடி காலக் கடன் வசதியும், பட்டி நிதி உதவியும் (Bill Financing) வழங்கப்படும்.

1,150-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும்.

8,500-க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ரூ.25 கோடியில் M-Sand உற்பத்தி ஆலை ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் அமைக்கப்படும்.

ஆலங்குளம் சுண்ணாம்புக்கல் சுரங்கக் கழிவுகளிலிருந்து கட்டுமான தொழிலுக்கு தேவைப்படும் M-Sandஐ உற்பத்தி செய்யும் சீரிய முயற்சி.

ரூ.6 கோடியில் விளையாட்டுத் திடல்கள்…!

தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி மற்றும் மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அமைக்கப்படும்.

தொழிலாளர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ஏதுவாக அமையும்.

ரூ.5 கோடியில் தனித்துவம் வாய்ந்த ஒரு தயாரிப்பு பொருட்கள் காட்சி மையம்…

தொழிற் சாலைகளின் தயாரிப்பு பொருட்களை ஒருசேர காட்சிப்படுத்த ஏதுவாக, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உருவாக்கப்படும்.

உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும் அதன் பயனாளிகளுக்கும் இடையிலான தொடர்பு மேம்படுத்தப்பட்டு, வணிக வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படும்.

சுற்றுலா தலங்களின் உள்கட்டமைப்பு தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் !

தமிழ்நாட்டில் சுற்றுலாவை ஊக்குவித்து முதலீட்டை ஈர்க்கும் வண்ணம், உகந்த சுற்றுலா தலங்களை சிப்காட் தேர்வு செய்யும்.

தொழில் வளர்ச்சியும், சுற்றுலா வளர்ச்சியும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஒரு புதிய மைல்கல்லை நோக்கி கொண்டு செல்லும்.

தனித்தியங்கும் ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கம் !

டிஜிட்டல்மயமாகும் அரசின் செயல்பாடுகள்.

மின் ஆளுமை இயக்குநரகத்தில் தரவுகளைப் பதிவேற்ற, பகிர, பாதுகாக்கப் புதிய அமைப்பு.

தரநிர்ணய, அமலாக்கப் பிரிவுகள் உருவாக்கம்.

IT, DS துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் தனித்த பண்புகளுடன் மறுசீரமைக்கப்பட்டு, அவற்றின் திறன், செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.

வெளிப்படைத்தன்மை, பொறுப்பினை உறுதி செய்திட, அவை நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8இன் கீழ் கொண்டுவரப்படும்.

பெருங்குடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா!

எல்காட் நிறுவனம் மூலம் 3.6 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும்.

வெளிப்படைத்தன்மையுடன் விலை கொணரும் முறையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அலுவலக இடவசதி ஏற்படுத்தித் தரப்படும்.

ரூ.15 கோடியில் புவிசார் கட்டமைப்பு உருவாக்கம்…

இடஞ்சார்ந்த தரவுகளை வலுவாகப் பயன்படுத்த உயர்தெளிவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் கொள்முதல் செய்யப்படும்.

அனைத்துத் துறைகளின் கொள்கை உருவாக்கம், திட்டமிடல், கண்காணிப்பு ஆகிய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய வசதி!

TANFINET மூலம் ஊரக, தொலைதூரப் பகுதிகளுக்குத் தடையின்றி அரசின் சேவைகள்.

குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய வசதி.

அரசு சுகாதார சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுக் கல்லூரிகள், இதர நிறுவனங்கள் உட்பட 30,000 பயனர்களுக்கு வழங்கப்படும்.

குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி!

குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய முயற்சி

மதிப்பு கூட்டுச் சேவையாகச் சந்தாதாரர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படும்.

ஆழ்தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கம்

புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு ஆழ்தொழில்நுட்பக் கொள்கை

ஆழ்தொழில்நுட்பம் மற்றும் வளர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முக்கிய சிக்கல்கூறுகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகள்.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

அறிவுசார் சொத்துரிமையின் தலைநகரமாகும் தமிழ்நாடு!

அறிவுசார் சொத்துரிமைக் கண்டுபிடிப்புகளுக்காக ஆண்டுதோறும் 1 ‘தமிழ்நாட்டில் புத்தமை’ (IN²TN) மாநாடு நடத்தப்படும்.

அறிவுசார் சொத்துரிமை வணிகமயமாக்கல் ஊக்குவிக்கப்படும்.

தொழிற்கல்வி நிலையங்களுக்கு ICTACT நிறுவனத்தின் இலவச உறுப்பினர் சேவைகள்!

ஆசிரியர் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கரின் சான்றிதழ்த் திட்டம், கருத்தரங்கம், அறிவுசார் போட்டி, ஆராய்ச்சி மாநாடு, வேலைவாய்ப்பு உதவி உள்ளிட்ட ICTACT நிறுவனத்தின் 16 சேவைகள் வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) மற்றும் (Polytechnic) கல்லூரிகளின் மாணவர்கள் பயன் பெறுவர். இவ்வாறு அறிவித்துள்ளார்.

The post தஞ்சையில் பாமாயில் தொழிற்சாலை, தி.மலை, கரூரில் மினி டைட்டில் பூங்காகள்: அமைச்சர் டி ஆர்,பி.ராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: