நாடு முழுவதும் செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை அதிரடியா உயர்த்தியது ஜியோ நிறுவனம்: ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம். 5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்படுகிறது. அதாவது, இந்த ரீசார்ஜ் கட்டணம் சுமார் 22% உயர்கிறது. ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள். தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 239 ஆக இருந்த தினசரி 1.5 ஜிபி நெட் பேக் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 299 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 299 ஆக இருந்த தினசரி 2 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 349 ஆக உயர்த்தப்படுகிறது. ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.

The post நாடு முழுவதும் செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை அதிரடியா உயர்த்தியது ஜியோ நிறுவனம்: ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: