இமாச்சல் காங்கிரசில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை: முதல்வர் சுக்வீந்தர் சிங் உறுதி

புதுடெல்லி: ‘இமாச்சல் காங்கிரசில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை’ என்று அம்மாநில முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு தெரிவித்து உள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 62 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளது. முதல்வராக சுக்வீந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். இவர், நேற்று   அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இமாச்சலப் பிரதேச காங்கிரஸுக்குள் எந்த உட்கட்சி பூசலும் இல்லை. மாநிலக் கட்சித் தலைவர் பிரதீபா சிங் மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி  உட்பட வேறு சிலர் முதல்வர் பதவிக்கு உரிமைகோரியதால் மோதல் இருந்தது.

மாநிலத்தில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவுக்கு மாற மாட்டார்கள். அமைச்சர் பதவிக்காக சில எம்எல்ஏக்கள் வற்புறுத்துவதாக வெளியான செய்திகளை தவறு. இப்போது வரை நாங்கள் அமைச்சரவை விரிவாக்கத்தை செய்யவில்லை என்பதை நீங்கள்  பார்க்கலாம். ஏதாவது தவறு நடந்திருந்தால், ராஜஸ்தான் போன்ற நிலைமை  வந்திருக்கும். அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடக்கும்.  முதல் அமைச்சரவை கூட்டம் விரைவில் நடக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை நாங்கள் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: