புதுடெல்லி: குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவித்ததை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
