மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த மருத்துவம்: ஒன்றிய அமைச்சர் மாண்டவியா தகவல்

ஐதராபாத்: நாட்டில்  அனைத்து மருத்துவகல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த மருத்துவத்துக்கான தனிப்பிரிவை அமைப்பதற்காக ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடந்த சர்வதேச ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மாநாட்டில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். மாநாட்டில் அமைச்சர் பேசியதாவது; தியானம், யோகா மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் வகையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. வரும் நாட்களில் அனைத்து மருத்துவக்கல்லூரிகள் அல்லது மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான தனிப்பிரிவை உருவாக்குவதற்கும், ஆராய்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது காலத்தின் தேவையாகும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: