ராமநாதபுரத்தில் ரூ.45 ஆயிரம் கோடி செலவில் கிரீன் ஹைட்ரஜன் தொழிற்சாலை: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ‘‘பெட்ரோல், டீசல் அதிகளவில் கார்பனை வெளியேற்றி சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் டூவீலர்கள், கார்களில் கிரீன் ஹைட்ரஜன் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

வளர்ந்த நாடுகளைப் போல, இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் தொழிற்சாலையை கொண்டுவர உள்ள ஒரே மாநிலம் தமிழகம். ராமநாதபுரம், தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரம் கோடியில் கிரீன் ஹைட்ரஜன் தொழிற்சாலை வர இருக்கிறது”

என்றார்.

Related Stories: