காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரியில் இடியுடன் கூடிய கனமழை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், ஒலிமுகமதுபேட்டை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. கடம்பத்தூர், பேரம்பாக்கம், தாமரைப்பாக்கம், புட்லூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரியில் இடியுடன் கூடிய கனமழை..!! appeared first on Dinakaran.

Related Stories: