கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் த.துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சி.அன்புச்செழியன், க.அன்புச்செல்வன், ஆதிமாறன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், பகுதி செயலாளர்கள் பி.குணாளன், த.ஜெயக்குமார், வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், இ.எஸ்.பெர்னாட், செம் பாக்கம் சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், பெருங்களத்தூர் சேகர், டி.காமராஜ், எஸ்.இந்திரன், ஒன்றியச் செய லாளர்கள் ந.கோபால், எஸ்.டி.கருணாநிதி, பையனூர் எம்.சேகர், எம்.டி.லோகநாதன், ஏ.வந்தே மாதரம், மூவரசம் பட்டு ரவி, ஆப்பூர் பி.சந்தானம், நகர செயலாளர்கள் எஸ்.நரேந்திரன், ஜெ.சண்முகம், டி.பாபு, எஸ்.ஜபருல்லா, கோ.சத்தியமூர்த்தி, எம்.கே.டி.கார்த்திக், பேரூர் செயலாளர்கள் மு.தேவராஜ், ஜி.டி.யுவராஜ், ஆர்.சதீஷ்குமார், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தீர்மானங்களை விளக்கி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”5வது முறை முதலமைச்சராக சிறப்பான முறையில் பணியாற்றி தமிழக அரசியல் வரலாற்றில் பொற்கால ஆட்சியை தந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஜூன் 3ம்தேதி தொடங்குகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லம், கருணை இல்லம், பார்வையற்றோர் பள்ளி, மாற்றுத்திறனாளிகள் தங்கும் இல்லம், மனநலம் குன்றியோர் தங்கும் விடுதி, தொழுநோயாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களுக்கு அன்றைய தினம் அறுசுவை உணவு வழங்குவது, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல், ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பான முறையில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற வரலாற்று சாதனையை படைத்து கடந்த 3 ஆண்டு பொற்கால ஆட்சியில் எண்ணிலடங்கா திட்டப்பணிகளை நிறைவேற்றிய தமிழக அரசின் சாதனைகளை விளக்கியும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பொருளாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட க.செல்வம் ஆகியோருக்கு இரவு, பகல் பாராமல் உழைத்த காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: