குழந்தைக்கு தங்க மோதிரம், நல உதவிகள் வழங்கி கலைஞரின் 101வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும்: காஞ்சி. தெற்கு மாவட்ட திமுக தீர்மானம்

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் இனியரசு தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வம் எம்பி, டி.வி.கோகுலக்கண்ணன், மலர்விழி குமார் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்று பேசியதாவது;
ஜூன் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடவேண்டும், ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். ஆகவே இந்த 2 நாட்களும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடவேண்டும். காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு காலை 7 மணிக்கு சென்று விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; ஒப்பற்ற தலைவராகவும் 19 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் 50 ஆண்டு திமுக தலைவராகவும், இருந்த கலைஞரின் பிறந்தநாளை உற்சாகமாக கொடியேற்றி, இனிப்பு வழங்கி, அன்னதானம், ஆடை தானம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி கொண்டாட வேண்டும்.

ஜூன் 3ம் தேதி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்று அற்புதமான ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு அரும்பாடு பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சியில், இளைஞரணி மாநில துணை செயலாளர் அப்துல் மாலிக், பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், கெ.ஞானசேகரன், சாலவாக்கம் டி.குமார், சேகர், குமணன், கே.கண்ணன், ஜி.தம்பு, இ.சரவணன், ஏ.சிற்றரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், ஒன்றியகுழு தலைவர் தேவேந்திரன்,
பேரூர் செயலாளர்கள் எழிலரசன், பாரிவள்ளல், சுந்தரமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவராமன், ராஜா ராமகிருஷ்ணன், மாலதி செல்வராஜ், ஜெயலட்சுமி மகேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் தசரதன், சம்யுக்தா அய்யனார், நகர மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம், சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் நூருல் அமீத், மாணவர் அணி துணை அமைப்பாளர் சரளா தனசேகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆண்டோ சிரில் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post குழந்தைக்கு தங்க மோதிரம், நல உதவிகள் வழங்கி கலைஞரின் 101வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும்: காஞ்சி. தெற்கு மாவட்ட திமுக தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: