அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடத்த திமுகவினர் முடிவு

ஊட்டி : பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வரும் 16ம் தேதி கோத்தகிரி பஜார் பகுதியில் நடத்த நீலகிரி திமுக., முடிவு செய்துள்ளது.  

நீலகிரி மாவட்ட திமுக., செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார்,லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் காசிலிங்கம், திராவிடமணி, இளங்கோவன், எக்ஸ்போ செந்தில், ராஜூ, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திமுக., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளப்படி, நீலகிரி மாவட்ட திமுக., சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வரும் 16ம் தேதி கோத்தகிரி பஜார் பகுதியில் நடக்கிறது. இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்துக் கொள்ள வேண்டும். கடந்த 1ம் தேதி சென்னையில் திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளிலும் அனைத்து கிளைகளிலும் வரும் 19ம் தேதி பேராசிரியர் அன்பழகனின் திருவுருவ படங்களை அலங்கரித்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

திமுக., கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும். ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் நீலகிரி மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி,காமராஜ்,லாரன்ஸ்,நெல்லை கண்ணன்,பிரேம்குமார், பீமன், சுஜேஷ், நகர செயலாளர்கள் ஜார்ஜ்,ராமசாமி,சேகரன், இளஞ்செழியன் பாபு,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா,சதக்கத்துல்லா,தொரை,பில்லன், ஷீலாகேத்ரின்,ராஜேந்திரன்,செல்வம்,ராஜா, அமிர்தலிங்கம், காளிதாஸ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ஆனந்தன், கர்ணன், ஜெயகுமாரி, காந்தல்ரவி, எல்கில்ரவி, ஆலன், யோகேஸ்வரன், பவீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: