ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்-சபரிமலை இடையே ரயில் பாதை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,  ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில், ‘‘திண்டுக்கல்லில் இருந்து தேனி, போடிநாயக்கனூர் வழியாக 133.6 கிமீ தொலைவில் உள்ள குமுளிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் கடந்த 2014ம் ஆண்டு முடிந்தது. இதேபோல் திண்டுக்கல் - சபரிமலைக்கு இடையிலான 201 கிலோமீட்டர் தூரமுள்ள புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான அளவீட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. அவை முழுமை அடைந்தவுடன் திட்ட பணிகள் துவங்கப்படும். ஏற்கனவே சபரிமலைக்கு ரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குமுளியிலிருந்து எரிமேலி வரை ரயில் பாதை அமைப்பதற்கான எந்த ஒரு முன்மொழிவும் கேரள ரயில்வே வாரியத்திடமிருந்து கிடைக்கப்பெறவில்லை’’ என தெரிவித்தார்.

Related Stories: