வரும் 12ம் தேதி யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவை தொடக்கம்

கொழும்பு: சுற்றுலாத் துறையின் மூலம் வருவாய் ஈட்டி வந்த அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனிடையே அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சுற்றுலா துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் அடுத்த வாரம் முதல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை தொடங்க உள்ளது.

இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் பால நாடாளுமன்றத்தில் பேசிய போது, ``யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள சென்னைக்கு வரும் 12ம் தேதியில் விமானங்கள் இயக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: