ரஷ்யா விமானத் தளங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

கீவ்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா அதன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், 9 மாதங்களை கடந்து நீடிக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், விமானங்களை வழங்கி வருகின்றன. இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி `தெற்கு ரோஸ்டோவ் பகுதியில் இருந்து காஸ்பியன் கடல்பகுதியில் ரஷ்யா ஏவிய 38 ஏவுகணைகள், கருங்கடல் பகுதியில் இருந்து ஏவிய 22  ஏவுகணைகள் என நேற்று முன்தினம் ரஷ்ய படையின் 60 ஏவுகணைகளை வழிமறித்து அழித்தனர்.

இந்த ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்,’ என்று தெரிவித்தார். குளிர்காலம் நெருங்குவதால், உக்ரைன் படையினருக்கு முடிந்தளவு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ரஷ்யா பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனது நாட்டின் 2 விமானத் தளங்கள் மீது உக்ரைன் படைகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக  ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: