ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உள்பட வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அது மட்டுமன்றி கோயிலில் நடைபெறும் ராகு- கேது பூஜைகளில் ஈடுபட உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள்  வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கார்த்திகை மாத திங்கட்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பிரேசில் நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர்.

Related Stories: