பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பை முன்னிட்டு நாடு முழுவதும் பேருந்து, ரயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் சோதனை

வேலூர் : பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் காவல்துறை சோதனை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் கோட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சித்த பிறகே அனுமதித்து வருகின்றனர்.

காட்பாடி ரயில்வே சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல அரக்கோணம் பழைய பேருந்து நிலைய பகுதியில் காவல்துறை ஆய்வாளர் சாலமன் ராஜ் தலைமையில் 20-க்கு மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அரக்கோணம் உட்கோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வெடிகுண்டு காவலர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் நியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல, திருப்பூர் ரயில் நிலையத்தில் 50-க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

Related Stories: