ஜனாதிபதி வருகையின்போது பாதுகாப்பு கடமைகளை கவனத்துடன் செய்ய வேண்டும்-ஆலோசனை கூட்டத்தில் டிஐஜி பேச்சு

திருப்பதி : திருப்பதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வருகையின் போது பாதுகாப்பு கடமைகளை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று அனந்தபூர் டிஐஜி ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அனந்தபூர் டிஐஜி ரவி பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்பி பரமேஸ்வர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டிஐஜி ரவி பிரகாஷ் பேசியதாவது:

திருப்பதி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையின் போது போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏனைய கள அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து தமது கடமைகளை திறம்பட செய்ய வேண்டும்.  மேலும்,  முழுமையான சோதனைகளுக்கு பிறகு அழைப்பாளர்களை பல்கலைக்கழக வளாகத்தில் அனுப்ப வேண்டும்.

ஊழியர்களின் பணிகளில் அதிகாரிகள் எந்த இடத்திலும் அலட்சிய போக்கை கடைபிடிக்க கூடாது. ஜனாதிபதியின் வருகைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொறுப்பான அதிகாரிகள் அந்தந்த பகுதிகளின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.  ஏதேனும், அசம்பாவிதங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எங்கும் அலட்சியமாகாமல் பணியில் உஷாராக இருக்க வேண்டும். கீழ்மட்ட ஊழியர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை விழிப்புடன் இருந்து ஒழுக்கத்துடன் பணியை செய்து முடிக்க வேண்டும். இதில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: