289 டன் வெற்றிலை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

புதுடெல்லி: போலி சான்றிதழ் மூலமாகவும் குறைவான விலையை பதிவிடுவதன் மூலமாகவும் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இந்தோனேஷிய வகையை சேர்ந்த வெற்றிலையை கடத்தி பணமோசடியில் ஈடுபட்டதாக நாக்பூரை சேர்ந்த சில வணிகர்கள் மீது சிபிஐ கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கு தொடர்பாக நாக்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது இந்தோனேஷிய வகையை சேர்ந்த சுமார் 289டன் வெற்றிலை பறிமுதல்  செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.11.5கோடியாகும்.

Related Stories: